Home உள்நாட்டு பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

49
0

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளன.

200 ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்திங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்க தீர்மானித்துள்ளதுடன், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை மாற்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here