பிரிட்டனின் 95 வயதான எலிசபெத் மகாராணி பல வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக ஒரு இரவை வைத்தியசாலையில் கழித்துள்ளார்.
ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக லண்டனில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகாராணி, புதன்கிழமை இரவை வைத்தியசாலையில் கழித்துள்ளார்.
பின்னர் அவர் வியாழன் மதிய உணவு நேரத்துக்கு பின்னர் வின்ட்சர் கோட்டைக்கு திரும்பியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மகா ராணியின் இந்த மருத்துவ பரிசோதனைகளினால் வடக்கு அயர்லாந்திற்கான புதன்கிழமை விஜயமும் இரத்து செய்யப்பட்டது.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணி வைத்தியசாலையில் ஒரு இரவை கழித்தது இதுவே முதல் முறை.