Home உள்நாட்டு புலனாய்வு பிரிவினாின் அறிவுரைகளை ஏற்று அரசியலில் ஈடுபடும் பழக்கம் எனக்கு இல்லை – சஜித் பிரேமதாஸ

புலனாய்வு பிரிவினாின் அறிவுரைகளை ஏற்று அரசியலில் ஈடுபடும் பழக்கம் எனக்கு இல்லை – சஜித் பிரேமதாஸ

76
0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) காலை கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு, சதிகாரர்கள் பல்வேறு சதித்திட்டங்களைத் ஆரம்பித்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயங்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி கைது செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் அவ்வாறு செய்யாமல் பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தனக்கும் புலனாய்வுப் பிரிவின் பிரதானிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் ஆலோசனைகளை ஏற்று அரசியலில் ஈடுபடும் பழக்கம் தமக்கு இல்லையெனவும் தெரிவித்தார்.

இந்த தாக்குதலின் உண்மை நிலைமையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் வரை இது தொடர்பில் திருப்பியடைய முடியாது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தாக்குதலுக்கு மூலக்காரணமாக செயற்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகள் இன்றி முன்வரும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, பேலியகொடை தொடக்கம் நீர்கொழும்பு வரையான பகுதிகளிலுள்ள களப்பு பகுதிகளை பாதுகாப்பது என்ற போர்வையில் நகரமயமாக்கல் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும், இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here