Home உள்நாட்டு பண்டாரவளையில் சிறுவர் காப்பகமொன்றில் 24 பேருக்கு கொரோனா

பண்டாரவளையில் சிறுவர் காப்பகமொன்றில் 24 பேருக்கு கொரோனா

82
0

பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, பண்டாரவளை பொது சுகாதாரப் பணியகத்தினர் தெரிவித்தனர்.

மேற்படி தொற்றாளர்களில் 18 பேர் சிறுவர்கள், ஏனைய அறுவரும் காப்பகத்தின் பணியாளர்களாவர்.

பண்டாரவளை ‘சுஜாதா செவன’ என்ற சிறுவர் காப்பகத்திலேயே, தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

நேற்றைய தினம் இக்காப்பத்தில் பணியாளர்கள் சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானதையடுத்து, காப்பக சிறுவர்களுக்கு இன்று சனிக்கிழமை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்பரிசோதனையின்போதே, சிறுவர்கள் 18 பேருக்கும், பணியாளர்கள் அறுவருக்குமாக 24 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட பணியாளர்களில், காப்பக பொறுப்பாளர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

இவர்களுடன் தொடர்பைப் பேணிய 12 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொற்றாளர்கள், இன்று பிந்துனுவௌ, ககாகொல்லை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீண்டும் பதுளை மாவட்டத்தில் தொற்றாளர்கள் மற்றும் மரணிப்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை  460 பேர் கொரோனா  தொற்றினால் சிகிச்சை பயனின்றி மரணமாகியுள்ளனர்.

பதுளை – 63 பேர், பண்டாரவளை – 51 பேர், எல்ல – 12 பேர், ஹல்துமுள்ளை – 22 பேர், ஹாலி-எலை – 50 பேர்,  ஹப்புத்தளை – 40 பேர், கந்தகெட்டிய – 04 பேர், லுணுகலை – 13 பேர், மகியங்கனை – 56 பேர், மீகாகியுல – 12 பேர், பசறை – 30 பேர், ரிதிமாலியத்தை – 12 பேர், சொரணாதொட்டை – 08 பேர், ஊவா – பரணகமை – 30 பேர், வெலிமடை – 57 பேர் என்ற வகையில் 460 பேர் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனரென்று, பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here