கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 271 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 515,183 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் 15,606 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் 617 புதிய கொவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 544,630 ஆக உயர்வடைந்தது.
கொவிட்-19 தொற்று தொடர்பில் 13,841 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.