
மகாராஷ்டிராவின் அஹ்மத் நகரில் உள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று முதல் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலையின் கொவிட்-19 சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின்போது குறித்த பிரிவில் 17 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஏனைய நோயாளிகள் மற்றொரு வைத்தியசாலையில் உள்ள கொவிட் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸ்லே செய்தியாளர்களிடம் கூறினார்.
இதேவேளை இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.