தெற்கு நைகரில் வைக்கோலால் வேயப்பட்ட பாடசாலை வகுப்பறை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 சிறுவர்கள் பலியாகினர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 5 முதல் 6 வயதுடைய சிறார்களே பலியானதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பல சிறுவர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைகரில் பலகைகள் மற்றும் வைக்கோல் என்பனவற்றால் அமைக்கப்பட்ட பாடசலை அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.