சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், ஐவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில், 8,820 குடும்பங்களைச் சேர்ந்த, 23,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
18 வீடுகள் முழுமையாகவும், 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்தநிலையில், 385 குடும்பங்களைச் சேர்ந்த 1,671 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.