ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்ற ‘கோப்26’ உச்சி மாநாட்டில் ஆபத்தான பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்காக வெளிப்படையாகத் திட்டமிடப்பட்டுள்ள முதலாவது பருவநிலை ஒப்பந்தம் இதுவாகும்.
இந்த ஒப்பந்தம் அதிக காபன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தினூடாகப் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் நாடுகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தநிலையில் பருவநிலை மாற்றத்திற்கான முடிவுக்கு இது வழிவகுக்கும் எனப் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இலக்கை நோக்கி அயராது தொடர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.