Home விளையாட்டு T20 உலகக்கிண்ணம் : அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கான பலப்பரீட்சை இன்று

T20 உலகக்கிண்ணம் : அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கான பலப்பரீட்சை இன்று

55
0

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(14) இடம்பெறவுள்ளது.

டுபாயில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 அளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியா அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இருபதுக்கு இருபது உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி விளையாடியிருந்தது.

நியூசிலாந்து அணி முதல்முறையாக இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here