அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றறுள்ளது.
ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் சீன ஜனாதியுடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
அத்துடன், இந்தச் சந்திப்பு தொலைக்காணொளி மூலம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது தாய்வான் எல்லைப் பிரச்சினை, வர்த்தகம், மனித உரிமைகள் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து இரு தலைவர்களும் கருத்து பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.