ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு – சேர் மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மையப்படுத்தி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்சமயம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியிலிருந்து ஆதரவாளர்கள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
விகாரமாதேவி பூங்காவை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்வதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்