கனடாவின் வன்கூவர் நகரில் வீசிய கடும் புயல் காரணமாக பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் ஒருவர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அங்கு தொடருந்து மற்றும் வாகன போக்குவரத்துக்கும் தடையேற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 7,500க்கும் அதிகமான மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மீட்பு பணியாளர்கள், காவல்துறையினருடன் இணைந்து தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.