உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் கார்பைன் முகுருசா, அனெட் கொன்டவீட்டை தோற்கடித்து சம்பியன் ஆகியுள்ளார்.
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது.
இதில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெய்ன் வீராங்கனை கார்பைன் முகுருசாவும், ஸ்தோனியாவைச் சேர்ந்த அனெட் கொன்டவீட்டும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-3 7-5 என்ற செட் கணக்கில் அனெட் கொன்டவீட்டை தோற்கடித்தார் கார்பைன் முகுருசா.
அவரது வெற்றி ஸ்பெய்னுக்கு முதன்முறையாக டபிள்யூ.டி.ஏ. பட்டத்தை பெற்றுத் தந்தது