Home வெளிநாட்டு பைஸர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரையின் விலை தொடர்பில் வெளியான செய்தி

பைஸர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரையின் விலை தொடர்பில் வெளியான செய்தி

83
0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி எதிர்ப்பு மருந்தாக இருந்துவரும் நிலையில், பைஸர் நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்து, அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைஸர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, வைத்தியசாலையில் மரணிக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

வீட்டிலிருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையைப் பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பண மதிப்பில் ஒரு கோடி மாத்திரைகளை 39,378.05 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்கிறது. அப்படி பார்த்தால் இலங்கை பண மதிப்பில் ஒரு மாத்திரையின் விலை 107,063.29 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here