மன்னார் பேசாலை சிறு தோப்பு பகுதியில் முச்சக்கர வண்டி மீது டிப்பர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
ஆபத்தான நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மன்னார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்
மன்னார் பேசாலை சிறு தோப்பு பகுதியில் மன்னார் பகுதியில் இருந்து வந்த முச்சக்கர வண்டி மீது இன்று (20) மாலை 3.00மணியளவில் தலைமன்னார் பகுதியில் இருந்து வந்த டிப்பர் மோதியதில் முச்சக்கர வண்டி பாரிய சேதமடைந்து அதனுடைய சாரதி மிகவும் ஆபத்தான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்
இது தொடர்பான மேலதிக விபரங்கள் தெரிய வருவதாவது
பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஸ்கூட்டி ரக மோட்டார் வண்டிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பிய பெண்கள் இருவரில் மோதுவதை தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதி வேறு பக்கம் திரும்பிய நிலையில் வேகமாக வந்த டிப்பர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்
சம்பவ இடத்திற்கு பேசாலை போலீசார் மற்றும் வீதி போக்குவரத்து போலீசாரும் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்