அமெரிக்க விஸ்கொன்சின் மாகாணத்தின் வவுகேஷா நகரத்தில் இடம்பெற்ற கத்தோலிக்க அணிவகுப்பு மீது மகிழுந்து ஒன்று மோதிய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 52 முதல் 81 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர குழந்தைகள் உட்பட 48 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பினை கொண்டிருக்கவில்லை என அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.