நாட்டில் நேற்றைய நாளில், 59,921 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில், 53,664 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 380,213 ஆக அதிகரித்துள்ளது.
1,286 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 873 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
845 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 3,249 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
நான்கு பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.