Home விளையாட்டு IPL 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரம்!

IPL 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரம்!

107
0

எதிர்வரும் இந்தியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துள்ளது என்பது குறித்த பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 8 அணிகளைச் சேர்ந்த 27 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். 2022 தொடரை முன்னிட்டு அணி வீரர்களுக்கான மாபெரும் ஏலம் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக அணியொன்றில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை சுப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி

எம்எஸ் டோனி – ரூ. 12 கோடி

மொயீன் அலி – ரூ. 8 கோடி

ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா – ரூ. 16 கோடி

ஜஸ்பிரீத் பும்ரா – ரூ. 12 கோடி

சூர்யகுமார் யாதவ் – ரூ. 8 கோடி

கைரன் பொலார்ட் – ரூ. 6 கோடி

ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி – ரூ. 15 கோடி

கிளென் மேக்ஸ்வெல் – ரூ. 11 கோடி

முகமது சிராஜ் – ரூ. 7 கோடி

டெல்லி கெப்பிடல்ஸ்:

ரிஷப் பன்ட் – ரூ. 16 கோடி

அக்ஷர் படேல் – ரூ. 9 கோடி

பிரித்வி ஷா – ரூ. 7.50 கோடி

அன்ரிச் நோர்க்கியா – ரூ. 6.50 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரஸல் – ரூ. 12 கோடி

வருண் சக்ரவர்த்தி – ரூ. 8 கோடி

வெங்கடேஷ் ஐயர் – ரூ. 8 கோடி

சுனில் நரைன் – ரூ. 6 கோடி

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் – ரூ. 12 கோடி

அர்ஷ்தீப் சிங் – ரூ. 4 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் – ரூ. 14 கோடி

அப்துல் சமத் – ரூ. 4 கோடி

உம்ரான் மாலிக் – ரூ. 4 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் – ரூ. 14 கோடி

ஜோஸ் பட்லர் – ரூ. 10 கோடி

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 4 கோடி

(பெறுமதி இந்திய ரூபாவில்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here