இரண்டாவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் (Galle gladiators) அணி, 54 ஓட்டங்களால் ஜஃப்னா கிங்ஸ் அணியை வெற்றிகொண்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷ அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் 165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக சமிட் பட்டேல் (Samit Patel) தெரிவானார்.