Home உள்நாட்டு கிளிநொச்சி – சோலைநகர் பகுதியில் பெருந்தொகையான எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி – சோலைநகர் பகுதியில் பெருந்தொகையான எறிகணைகள் மீட்பு!

103
0

கிளிநொச்சி – உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சோதனையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பழைய எறிகணை ஒன்றினை வெட்டுவதற்கு முற்பட்ட வேளையில் அது வெடித்ததால் நபர் ஒருவர் பலியானார்.

இந்த சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வளாகத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு பெருந்தொகையான பழைய வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here