திருகோணமலை – தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லையென எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக தம்பலகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.