Home வெளிநாட்டு தொடருந்தை நிறுத்திவிட்டு யோகட் வாங்கிய ஓட்டுநர், உதவியாளர் பணி இடைநிறுத்தம்

தொடருந்தை நிறுத்திவிட்டு யோகட் வாங்கிய ஓட்டுநர், உதவியாளர் பணி இடைநிறுத்தம்

221
0

பாகிஸ்தானில் யோகட் வாங்குவதற்காக பாதி வழியில் தொடருந்தை நிறுத்திய தொடருந்து இயக்குநர் மற்றும் உதவியாளர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

லாஹூர், கஹ்னா கச்சா தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சந்தையொன்றுக்கு அருகில் இவர்கள் குறித்த தொடருந்தை நிறுத்தி, இவ்வாறு யோகட் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. இதனையடுத்து, தொடருந்து திணைக்களத்தின் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், மத்திய தொடருந்து போக்குவரத்து அமைச்சர் அசாம் கான் ஸ்வாதி இன்று, குறித்த தொடருந்து இயக்குநர் மற்றும் உதவியாளரைப் பணியிலிருந்து இடைநிறுத்த உத்தரவிட்டார்.

“எதிர்காலத்தில் இது போன்ற செயல்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன், மேலும் பொது சொத்துக்களை தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்” என்றும் அமைச்சர் அறிக்கையொன்றினூடாக எச்சரித்துள்ளார்.

முன்னதாக இம்மாதத்தில், பயணத்தின்போது தொடருந்து இயக்குநர்கள் மற்றும் உதவியாளர்கள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் தொடருந்து திணைக்களம் தடை விதித்தது.

தொடருந்து பணியாளர்களை (குறிப்பாக இயக்குநர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள்) கண்காணிக்கவும், எவரேனும் உத்தரவுகளை மீறினால், உடனடி நடவடிக்கை எடுக்கவும் அந்நாட்டு தொடருந்து திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here