இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இதன்போது, மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் உயிர் குமிழி முறையின் கீழ், பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகினார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது.
எனினும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி நிச்சயமாக பங்கேற்பார் என இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு சபை (BCCI) தெரிவித்துள்ளது.