திம்புள்ள – பத்தனை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில், வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளான சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, கொட்டகலை சிமோல் டிறைட்டன் தோட்டத்தில் உள்ள வீடொன்றிலும், சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளான சம்பவம் நேற்று(17) இடம்பெற்றுள்ளது.
குறித்த இரண்டு வீடுகளிலும், வீட்டார் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திம்புள்ள – பத்தனை காவல்துறையினர் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.