Home விளையாட்டு கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 58 ஓட்டங்களால் வெற்றி

கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 58 ஓட்டங்களால் வெற்றி

69
0

லங்கா ப்ரிமியர் லீக் தொடரில், கண்டி வொரியர்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 182 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 183 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய கண்டி வொரியர்ஸ் அணி, 17 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

எல்.பி.எல் தொடரில், இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் ஜப்னா கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

8 போட்டிகளில் பங்கேற்ற ஜப்னா கிங்ஸ் அணி, 6இல் வெற்றிபெற்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

காலி க்ளடியேட்டர்ஸ் அணி, 8 போட்டிகளில் 4இல் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 8 போட்டிகளில் 4இல் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும், தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி, 8 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்று, 7 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.

கண்டி வொரியர்ஸ் அணி, 8 போட்டிகளில் 2இல் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here