Home உள்நாட்டு இன்று 10 மணிநேர மின் துண்டிப்பு!

இன்று 10 மணிநேர மின் துண்டிப்பு!

42
0

இன்றைய தினம், நாடளாவிய ரீதியில், சுழற்சி முறையில் 10 மணிநேரம் மின்துண்டிப்பை அமுலாக்க, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வலய ரீதியாக, காலை 8 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, A B C D E F வரையான வலயங்களில், பிற்பகல் 2 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேரமும்,

G H I J K L வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில், 6 மணிநேரமும்,

மாலை 6 மணிமுதல், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், 4 மணிநேரமும்,

P Q R S வரையான வலயங்களில், பிற்பகல் 2 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேரமும்,

T U V W வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில், 6 மணிநேரமும்,

மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும்,

M N O X Y Z வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், 4 மணிநேரமும் மின்தடை அமுலாதக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here