Home விளையாட்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் இராஜஸ்தான் றோயல்ஸ் அணி 61 ஓட்டங்களால் வெற்றி!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் இராஜஸ்தான் றோயல்ஸ் அணி 61 ஓட்டங்களால் வெற்றி!

39
0

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

புனெயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஒவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து, 210 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசரஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியுடன் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

லாஹுரில் இடம்பெற்ற போட்டியில், முதலில் தடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 314 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 45.2 ஓவர்களில், 225 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here