Home விளையாட்டு குஜராத் டைட்டன்ஸ் 37 ஓட்டங்களால் வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் 37 ஓட்டங்களால் வெற்றி

54
0

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக அதன் தலைவர் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 193 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக ஜோஸ் பட்லர் 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here