Home வெளிநாட்டு புதிய பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாரென அமெரிக்கா அறிவிப்பு

புதிய பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாரென அமெரிக்கா அறிவிப்பு

43
0

பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்த ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

தமது அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அல்லது உலகில் வேறு எங்கும் மற்றொரு அரசியல் கட்சியை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவாக இருக்காது என்று அவர் வலியுறுத்தினார்.

மாறாக, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் நேர்மை போன்ற பரந்த கொள்கைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று இராஜாங்க திணைக்கள செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதனிடையே, ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பு இருக்காது என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பார்பர் இப்திகார் நேற்று மறுத்தார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தனி நபருக்கு சொந்தமானவை அல்ல என்றும் சர்வதேச மதிப்பீடுகளின்படி அதன் கட்டுப்பாட்டு பொறிமுறையானது உயர் மட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here