நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி, எரிசக்தி மற்றும் சுகாதார அமைச்சுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.