கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரையில், யுக்ரைனில் இருந்து சுமார் 5 மில்லியன் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய புகலிடக் கோரிக்கையாளர் நெருக்கடி இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, 4,796,245 யுக்ரேனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யுக்ரைனுக்கு ஒரு பில்லியன் யூரோவுக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்க உள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் இந்த ஆண்டுகக்கான இடைக்கால பாதீட்டில் குறித்த நிதி உள்ளீர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினிருந்து கனரக ஆயுதங்களைப் பெறவில்லை என யுக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், ஜேர்மனியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.