Home வெளிநாட்டு கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்!

கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்!

56
0

யுக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய எறிகணை மற்றும் வான்வழி தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

அதேநேரம், மைக்கோலாவின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்தும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை, யுக்ரைனின் மரியுபோல் நகரில் தாக்குதல்களை நடத்தி வரும், பாதுகாப்பு தரப்பினரை சரணடையுமாறு ரஷ்யா முன்னதாக தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இறுதி கட்டம் வரையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என யுக்ரைன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here