Home விளையாட்டு டேவிட் மில்லரின் அதிரடியால் சென்னையை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

டேவிட் மில்லரின் அதிரடியால் சென்னையை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

57
0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அல்சாரி ஜோசப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 170 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

குஜராத் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 51 பந்துகளில் 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here