Home உள்நாட்டு புதிய அமைச்சரவை நியமனத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை இன்று இரவு ஒளிபரப்பு!

புதிய அமைச்சரவை நியமனத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை இன்று இரவு ஒளிபரப்பு!

62
0

அமைச்சரவைக்கு புதிதாக 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரச நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் ஊழலை ஒழிப்பதற்கு வரப்பிரசாதங்களை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு அமைச்சரவை அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பொதுமக்களின் கோரிக்கையான முறைமை மாற்றத்தை ஏற்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர்களிடம் கோரிய ஜனாதிபதி அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இளைஞர்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here