எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாணந்துறை நகரிலிருந்து காலி – கொழும்பு பிரதான வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, எமது செய்தி சேவை தெரிவித்தது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அநுராதபுரத்தில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் பணிபுரியும் அனைவரும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.