யுக்ரைனின் கிழக்கு பகுதியான டொன்பாஸ் பகுதியில் ரஷ்யாவின் பாரிய அளவிலான தாக்குதல் இடம்பெற்று வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பை உடைப்பதற்கு ரஷ்யா முயற்சித்ததாக யுக்ரைனின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு நகரான லிவிவ்வில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் 7 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான பின்னணியில் யுக்ரைனியில் இருந்து 4.9 மில்லியன் மக்கள் யுக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.