இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், உக்ரைன் – ரஷ்ய போர் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு மற்றும் இங்கிலாந்து – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்களில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்திய – ரஷ்ய உறவுகள் மற்றும் அமெரிக்காவின் ரஷ்ய எதிர்ப்பு விடயங்கள் உள்ளிட்டவை முக்கிய பேசு பொருளாக அமையும்.
மேலும் இங்கிலாந்து பெரும்பாலும் மென்மையான அழுத்தத்தை இந்தியாவிற்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் விசேடமாக கலந்துரையாடுவார்.
இங்கிலாந்து – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விசேட அறிவிப்பொன்றை இந்த விஜயத்தின் போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.