ரஷ்ய நாணயத்தின் கூர்மையான ஏற்ற இறக்கம் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலையின் காரணமாக, பரிவர்த்தனைகளை நேரடியாகத் தீர்க்க, ரூபாய் – ரூபிள் கட்டண முறையை உறுதி செய்ய இந்தியா இன்னும் சிறிது காலம் எடுக்கும்.
இந்திய வர்த்தகர்களும் எந்த அவசரத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று ஒரு உயர் அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி இந்திய டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, வளர்ந்த நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மார்ச் தொடக்கத்தில் ரூபிள் சுமார் 75 இல் இருந்து ஒரு டொலருக்கு 136 ஆகக் குறைந்தது. ரஷ்ய நாணயம் ஒரு டொலருக்கு சுமார் 83 ஆக உயர்ந்தது.
இதனால் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வர்த்தகர்களுக்கு உதவ ஒரு பிரத்யேக பொறிமுறையை உருவாக்கியுள்ளது.
ஒரு மூத்த தொழில்துறை அதிகாரி கூறுகையில், ஈரானின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோது, அந்நாட்டுடனான வர்த்தகத்தைத் தீர்த்துக்கொள்ள புதுடெல்லி வேறு நட்பு நாடுகளின் வங்கிகளைப் பயன்படுத்தியது.
எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த முறை எச்சரிக்கையுடன் உள்ளது. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை கவனத்தில் கொண்டு செயற்படுகிறது என தெரிவித்தார்.