Home சினிமா அடுத்த கட்டத்துக்கு சென்ற விஜய் ஆண்டனியின் ரத்தம்…. வெளியான exciting புகைப்படம்!

அடுத்த கட்டத்துக்கு சென்ற விஜய் ஆண்டனியின் ரத்தம்…. வெளியான exciting புகைப்படம்!

34
0
விஜய் ஆண்டனி நடிப்பில் சி எஸ் அமுதன் இயக்கும் ரத்தம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழ்ப் படம் புகழ்  CS.அமுதன் இயக்கும் ‘ரத்தம்’ படம் சில மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில்,  தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில்  துவங்கவுள்ளது.

சி எஸ் அமுதன் இயக்கும் இந்த திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படங்களை போல நகைச்சுவை அம்சம் கொண்டதாக இல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் வெளிநாடுகளில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்நிலையில் தற்போது இந்த படத்துகாக தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இது சம்மந்தமான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here