அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பித்துள்ளது.
எனினும் காலி முகத்திடலுக்கு செல்லும் சில உப வீதிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் அதிகளவிலான காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் 16ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்தநிலையில் காலி முகத்திடலுக்கு செல்லும் உப வீதிகள் மூடப்பட்டுள்ளமையினால் போராட்டத்துக்கு செல்பவர்களும் சாரதிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் மருதானை – தொழிநுட்ப சந்தியிலும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் தம்பலகாமம் – கிண்ணியா வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.