இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரானது அடுத்த மாதம் 15ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ளது.
பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹிப் ஹல் ஹசன் மீண்டும் பங்களாதேஷ் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதற்கமைய, மொமினுல் ஹக், தலைமையிலான பங்காளாதேஷ் குழாமில், தமிம் இக்பால், மொஹ்மதுல் ஹசன், நஜ்முல் ஹூசைன், முஸ்கிபுர் ரஹீம், லிட்டன் தாஸ், சஹிப் ஹல் ஹசன், யாசிர் அலி, தய்ஜூல் இஸ்லாம், காலிட் அஹமட் உள்ளிட்ட வீரர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.