மகளிருக்கான தேசிய 400 மீற்றர் தடைத்தாண்டல் போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
25 வயதான அவர் தும்மலசூரிய, பகுதியிலுள்ள தமது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் 58.73 வினாடிகளில் இலக்கினை கடந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்