நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வெடி விபத்தில் மேலும் பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்