ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் இன்றைய சுகயீன விடுமுறையை முன்னிறுத்தி ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பல பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையினால் பல பாடசாலைகளின் மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அஞ்சல் காரியாலயங்களுக்கு சென்று தந்தி சேவை ஊடாக விடுமுறை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.