சீனாவில் 39 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
தற்போது, சீனாவின் – ஷங்காய் நகரிலேயே அதிகளவானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் குறித்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.
இரண்டு வருடங்களுக்கு பின்னரான காலப்பகுதியில் மீண்டும் அதிகளவானோருக்கு சீனாவில் கொவிட்-19 தொற்றுறுதியாவதை அடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை சீன சுகாதாரத்துறை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.