Home விளையாட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி!

59
0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் சார்பில் துடுப்பாட்டத்தில் கே.எல் ராஹூல் 62 பந்துகளில் 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக லக்னொவ் சுப்பர் ஜயன்ஸ் அணியின் கே.எல் ராஹூல் தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here