IPL கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷிக்கர் தவான் ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து 188 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் அந்த அணியின் வீரர் அப்பத்தி ராயுடு 78 ஓட்டங்களைப் பெற்றார்.