Home வெளிநாட்டு தொடருந்து நிலையங்களை இலக்கு வைத்து நகரும் யுக்ரைன் – ரஷ்ய தாக்குதல்கள்

தொடருந்து நிலையங்களை இலக்கு வைத்து நகரும் யுக்ரைன் – ரஷ்ய தாக்குதல்கள்

42
0
வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்வதற்காக யுக்ரைன் தொடருந்து சேவைகளை இயக்கும் 6 உப மின் நிலையங்களை அழித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இராணுவ உதவிகளை தடுப்பதற்காக ரஷ்யா, தொடருந்து மையங்களை இலக்கு வைப்பதாக யுக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த தாக்குதலில் மத்திய யுக்ரைனில் 5 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 15,000 ரஷ்ய துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வேலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுக்ரைனின் சில பகுதிகளை மிருகதனமாக நடத்த ரஷ்யா முயற்சிக்கின்ற போதிலும் அதன் போர் நோக்கங்களில் தோல்வியடைந்து வருவதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கியை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரஷ்யா, இராணுவ ரீதியாக வலுவிழந்து இருப்பதை அமெரிக்கா பார்க்க விரும்புவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here