Home வெளிநாட்டு யுக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா உறுதி

யுக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா உறுதி

52
0
FILE PHOTO: U.S. Secretary of State Antony Blinken speaks during the release of the "2020 Country Reports on Human Rights Practices" at the State Department in Washington, DC, U.S., March 30, 2021. Mandel Ngan/Pool via REUTERS/File Photo

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கென் யுக்ரைனுக்கான விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்ட நிலையில், யுக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.

இந்த உதவிகள் யுக்ரைனின் நட்பு நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 71 கோடியே 3 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உதவியினை யுக்ரைன் மற்றும் அதன் சில நட்புகள் என்பன பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ரஷ்யாவினை எதிர்த்து போராடுவதற்காக யுக்ரைனுக்கு மட்டும் 32 கோடியே 20 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நிதி நேற்றோ நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இது தவிர, 16 கோடியே 50 லட்சம் பெறுமதியான சோவிற் தயாரிப்பு ரவைகள் யுக்ரைனுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யுக்ரைனை மக்களுக்காக 50 கோடி அமெரிக்க டொலர் வழங்கப்படும் என கடந்த வாரம் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

முன்னதாக மத்திய மற்றும் மேற்கு உக்ரைன் பிராந்தியத்தில் உள்ள 5 தொடரூந்து நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானதில் பலர் பாதிக்கப்பட்டனர்.

மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்ற் உருக்கு தொழிற்சாலை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிறுத்தப்படும் காலப்பகுதியினில், மக்கள் அங்கிருந்து வெளியேறலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த அறிவித்தலுக்கு முன்னர் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின் படி ரஷ்யாவின் சோதனை நிலையங்களில் தாம் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, டொனிற்ஸ்கேயில் நேற்று மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பொது மக்கள் பலியானதாக அந்த பிரதேசத்தின் ஆளுனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here